செய்திகள்
டேவிட் வார்னர்

குறைந்த பட்சம் 25 சதவீதம் ரசிகர்கள் கூட்டத்தை பார்க்க முடியும்: வார்னர் நம்பிக்கை

Published On 2020-09-20 16:58 GMT   |   Update On 2020-09-20 16:58 GMT
இந்தியாவுக்கு எதிரான தொடரில் குறைந்த பட்சம் 25 சதவீதம் ரசிகர்கள் பார்க்க முடியும் என ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத தொடர் டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளன. ஆனால் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடிய போட்டிகள் வெறிச்சோடிய மைதானத்தில் நடைபெற்றது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரும் வெறிச்சோடிய மைதானத்தில்தான் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் 25 சதவீத ரசிர்களை பார்க்க முடியும் என டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில் ‘‘இரண்டு தலைசிறந்த அணிகள் மோதும் தொடருக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். கால்பந்து போட்டிகளை பார்க்க ரசிகர்களை அனுமதிப்பது போல், கிரிக்கெட் போட்டிக்கும் 25 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி இருந்தால் சிறப்பானதாக இருக்கும்’’ என்றார்.

விக்டோரியா மாநில முதல்வர் டேனியல ஆண்ரூவ்ஸ், கடந்த வாரம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன், பாக்சிங் டே டெஸடில் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News