செய்திகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி

ஐபிஎல் கிரிக்கெட் : போட்டி நடைபெறும் மைதானத்திற்கு புறப்பட்டு சென்றனர் சென்னை, மும்பை அணி வீரர்கள்

Published On 2020-09-19 13:02 GMT   |   Update On 2020-09-19 13:02 GMT
ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் போட்டி இன்று நடைபெற உள்ளது. இதற்காக சென்னை மற்றும் மும்பை அணி வீரர்கள் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
துபாய்: 

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. 

அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்க உள்ள இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டம் அபுதாபியில் உள்ள ஷேக் சயத் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

இதையடுத்து, கொரோனா நடைமுறையை பின்பற்றி இரு அணி வீரர்களும் தாங்கள் தங்கி இருந்த நட்சத்திர விடுதியில் இருந்து போட்டி நடைபெற உள்ள ஷேக் சயத் மைதானத்திற்கு தற்போது புறப்பட்டு சென்றனர்.

போட்டி நடைபெற உள்ள மைதானத்திற்கு பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலியும் புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News