செய்திகள்
டீன் ஜோன்ஸ்

இவர் இல்லாதது சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு கவலை அளிப்பதாக இருக்கும்- டீன் ஜோன்ஸ்

Published On 2020-09-17 11:50 GMT   |   Update On 2020-09-17 11:50 GMT
சுழற்பந்து வீச்சை சிறப்பாக விளையாடும் இடது கை பேட்ஸ்மேனான ரெய்னா இல்லாதது, சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய அளவில் கவலை அளிப்பதாக இருக்கும் என டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - 2-வது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தனிமைப்படுத்துதல், பயோ-செக்யூர் ஆகியவற்றை சிறப்பாக எதிர்கொள்ள எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரும்பாலான வீரர்கள் ஒரு வாரம் சிறப்பு முகாமை சேப்பாக்கம் மைதானத்தில் மேற்கொண்டனர்.

ஐக்கிய அரபு அமீரகம் சென்றதும் வீரர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அப்போது ரெய்னா அவசரமாக இந்தியா திரும்பினார். மேலும், இந்த தொடர் முழுவதிலும் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைக் கேப்டனான சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து விலகியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்நிலையில் ரெய்னா இல்லாதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய அளவில் கவலை அளிப்பதாக இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளரும் ஆன டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டீன் ஜோன்ஸ் கூறுகையில் ‘‘இந்த நேரத்தில் ரெய்னா இல்லாதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அவர் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் உள்ளார். அவர் ஒரு இடது கை பேட்ஸ்மேன். சுழற்பந்து வீச்சை சிறப்பாக விளையாடுவார். அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் வலது கை பேட்ஸ்மேன்கள் என்பதால், அது சிஎஸ்கே அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடது கை பேட்ஸ்மேன்கள தேவை. அல்லது லெக்-ஸ்பின்னரை சிறப்பாக விளையாட வேண்டும். இதனால் சென்னை அணி சாம் கர்ரன், ஜடேஜா, வெயினி் பிராவோ ஆகியோரை கொண்டு இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். வாட்சன், எம்எஸ் டோனி நீண்ட நேரம் களத்தில் நிற்கமாட்டார்கள்.’’ என்றார்.
Tags:    

Similar News