செய்திகள்
நவ்தீப் சைனி உடன் சைமன் காடிச்

ரசிகர்கள் இல்லாதது இளம் வீரர்களுக்கு ஆதாயம் என்கிறார் ஆர்சிபி பயிற்சியாளர்

Published On 2020-09-06 13:10 GMT   |   Update On 2020-09-06 13:10 GMT
ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்தப்படுவதால், இளம் வீரர்களுக்கு நெருக்கடி சற்று குறைவாக இருக்கும் என ஆர்சிபி பயிற்சியாளர் சைமன் காடிச் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 13-வது சீசன் நடைபெற இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஐபிஎல் போட்டி எப்போதும் மைதானம் நிரம்பிய ரசிகர்களின் ஆரவாரத்துடன் நடைபெறும். இந்த முறை அது மிஸ்சிங்.

ரசிகர்கள் இல்லாதது இளம் வீரர்களுக்கான நெருக்கடியை சற்று குறைக்கும் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் சைமன் காடிச் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சைமன் காடிச் கூறுகையில் ‘‘என்னுடைய தனிப்பட்ட முறையில், சில இளம் வீரர்கள் இந்த சூழ்நிலையில் மகிழ்ச்சியாக விளையாடுவார்கள். மைதானத்தில் ரசிகர்கள் இல்லாதது சத்தம் மற்றும் கவனச் சிதறல்கள் போன்றவற்றில் அவர்களுக்கான நெருக்கடியை சற்று குறைப்பதாக இருக்கும் என நினைக்கிறேன்.

சில அனுபவ வீரர்களுக்கு இது அதிக சவால்களை ஏற்படுத்தும். அவர்கள் ரசிகர்கள் ஆரவாரத்தை மிகப்பெரிய பலமாக கருதுவார்கள். எங்களுடைய அணி அதிகமாக உத்வேகத்துடன் சென்று, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News