செய்திகள்
இந்திய டெஸ்ட் அணி (கோப்புப்படம்)

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் 25 பேர் இடம் பிடிக்க வாய்ப்பு: அடுத்த மாதம் அறிவிப்பு

Published On 2020-09-06 10:21 GMT   |   Update On 2020-09-06 10:21 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் 23 முதல் 25 பேர் இடம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 13-வது சீசன் வருகிற 19-ந்தேதி தொடங்கி நவம்பர் 10-ந்தேதி முடிவடைகிறது. அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

கொரோனா காலம் என்பதால் ஆஸ்திரேலியாவில் வீர்ரகள் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். இதனால் முன்னதாகவே செல்ல வேண்டும்.

இதனால் ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு இடம் பெறாத அணிகளில் இடம்பிடித்திருக்கும் வீரர்கள், ஐபிஎல் தொடரில் இடம்பெறாத ரவி சாஸ்திரி போன்றோர் அக்டோபர் இறுதி வாரத்தில் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின் ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர் மற்ற வீரர்கள் அவர்களுடன் இணைந்து கொள்வார்கள்.

மேலும், ஆஸ்திரேலியா தொடருக்கான டெஸ்ட் அணி அக்டோபர் 2-வது வாரத்தில் அறிவிக்கப்படலாம் எனவும், அணியில் 23 முதல் 25 பேர் இடம் பெறலாம் எனவும் தெரிகிறது.

ஒருவேளை கொரோனா தொற்றால் வீரர்கள் பாதிக்கப்பட்டால் மாற்று வீரர்களுக்கான இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணியில் 20-க்கும் மேற்பட்டோர் இடம்பிடித்திருந்ததால் இந்த விசயத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை.

மேலும், நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்திற்கு 25 பேர் சென்றால் சிறப்பாக இருக்கும் எனவும், வலைப்பயிற்சிக்கான வீரர்களை தேட வேண்டாம் எனவும் பிசிசிஐ விரும்புகிறது.
Tags:    

Similar News