செய்திகள்
கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனைக்காக 10 கோடி ரூபாய் செலவு செய்யும் பிசிசிஐ

Published On 2020-09-01 19:50 IST   |   Update On 2020-09-01 19:50:00 IST
ஐபிஎல் போட்டியை பாதுகாப்பாக நடத்துவதற்கான 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பிசிசிஐ 10 கோடி ரூபாய் செலவு செய்ய இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடத்தப்பட இருக்கிறது.

இதற்காக 8 அணிகளும் கடந்த 20-ந்தேதியில் இருந்து புறப்பட்டுச் சென்றன. அணிகளைச் சேர்ந்தவர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.

அணியின் ஒவ்வொரு நபர்களும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆகஸ்டு 20-ந்தேதியில் ஐபிஎல் போட்டி முடியும் வரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுகாதார மையத்தை ஏற்பாடு செய்துள்ளது. ஒரு பிசிஆர் பரிசோதனைக்காக 200 திர்ஹம் பிசிசிஐ வழங்குகிறது. அதன்படி பார்த்தால் பிசிசிஐ 10 கோடி ரூபாய் செலவழிக்க இருக்கிறது. பரிசோதனை பணியில் 75 சுகாதார அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Similar News