செய்திகள்
தோல்வி சோகத்தில் மெஸ்சி

8-2 என பார்சிலோனாவை துவம்சம் செய்த பேயர்ன் முனிச்: கால்பந்து வரலாற்றில் மெஸ்சி கண்டிராத தோல்வி

Published On 2020-08-15 09:46 GMT   |   Update On 2020-08-15 09:46 GMT
யூரோப்பியன் சாம்பியனஸ் லீக் கால்பந்து காலிறுதியில் பார்சிலோனாவை 8-2 என துவம்சம் செய்து அரையிறுதிக்கு முனனேறியது பேயர்ன் முனிச்.
யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த அணியான பார்சிலோனாவும், ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணிகளும் விளையாடின. இந்திய நேரப்படி இன்று அதிகாலை போட்டி நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணியின் தாமஸ் முல்லர் முதல் கோலை பதிவு செய்தார். 7-வது நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு ஓன் கோல் மூலம் ஒரு கோல் கிடைத்தது. இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலைப் பெற்றன

21-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணியின் இவான் பெரிசிக் ஒரு கோலும், 27-வது நிமிடத்தில் செர்ஜ் காப்ரி ஒரு கோலும், 31-வது நிமிடத்தில் தாமஸ் முல்லர் ஒரு கோலும் அடித்தனர். இதனால் முதல் பாதி நேரத்தில் பேயர்ன் முனிச் 4-1 என முன்னிலைப் பெற்றது.

2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியது. 57-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் லூயிஸ் சுவாரஸ் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 2-4 எனப் பின்தங்கியிருந்தது.

அதன்பின் பேயர்ன் முனிச் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 63-வது நிமிடத்தில் ஜோசுவா கிம்மிச், 82-வது நிமிடத்தில் ராபர்ட் லெவன்டாஸ்கி ஒரு கோலும் அடித்தனர்.



பார்சிலோனா அணியில் இருந்து பேயர்ன் முனிச் அணிக்கு லோன் மூலம் சென்ற பிலிப்பே கவுட்டினோ 85-வது நிமிடத்தில் ஒரு கோலும், 89-வது நிமிடத்தில் ஒரு கோலும் அடிக்க பேயர்ன் முனிச் 8-2 என அபார வெற்றி பெற்று பார்சிலோனாவை துவம்சம் செய்தது.

மெஸ்சி தலைமையிலான பார்சிலோனாவுக்கு இது மிகவும் மோசமான தோல்வியாகும். மேலும், மெஸ்சி கால்பந்து வரலாற்றில் இதுபோன்ற மோசமான தோல்வியை சந்தித்தது கிடையாது.
Tags:    

Similar News