செய்திகள்
கங்குலி

குறைக்க முடியாது: கங்குலி வேண்டுகோளை நிராகரித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட்

Published On 2020-07-22 14:02 GMT   |   Update On 2020-07-22 14:02 GMT
14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடரின்போது இந்திய அணி வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவது என்பது அதிகமானதாகும். இதனை சற்று குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லி அளித்த ஒரு பேட்டியில், ‘‘வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது ஆஸ்திரேலிய அரசின் விதிமுறையாகும்.

அதனை இந்திய கிரிக்கெட் அணியும் கடைப்பிடித்தாக வேண்டும். அதேநேரத்தில் தனிமைப்படுத்துதல் காலத்திலும் பயிற்சி பெறும் வகையில் இந்திய அணியினருக்கு அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்து கொடுக்கப்படும். அடிலெய்டு மைதானத்தில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்துதலுக்கு தேவையான வசதிகள் உள்ளது’’ என்றார்.
Tags:    

Similar News