செய்திகள்
ராகுல் டிராவிட்

2008-ல் நீக்கப்பட்டபோது கிரிக்கெட் வாழ்க்கை பாதுகாப்பற்றது போல் உணர்ந்தேன்: ராகுல் டிராவிட்

Published On 2020-07-18 07:00 GMT   |   Update On 2020-07-18 07:00 GMT
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து 2008-ம் ஆண்டு நீக்கப்பட்டபோது கிரிக்கெட் வாழ்க்கை பாதுகாப்பற்றது போன்று உணர்ந்ததாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தடுப்புச்சுவர் என்ற அழைக்கப்பட்டவர் ராகுல் டிராவிட். அவர் டெஸ்ட் போட்டியில் மட்டுமே நன்றாக விளையாடியுள்ளார் என்று ரசிகர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால் ஒருநாள் போட்டியிலும் 10 ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு வடிவிலான கிரிக்கெட்டிலும் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த சில ஜாம்பவான்களில் இவரும் ஒருவர்.

47 வயதாகும் ராகுல் டிராவிட் 1996-ம் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011 செப்டம்பர் மாதம் வரை 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 சதங்களுடன் 10,899 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 39.16 ஆகும்.

1996-ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 2012-ம் ஆண்டு ஜனவரி வரை 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 சதங்களுடன் 13,288 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 52.31 ஆகும். ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார்.

1998-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். சுமார் ஒரு வருடம் கழித்து மீண்டும் அணிக்கு திரும்பினார்.

அணியில் இருந்து நீக்கப்பட்டபோது கிரிக்கெட் வாழ்க்கை பாதுகாப்பற்றது என உணர்ந்ததாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘கிரிக்கெட்டில் பாதுகாப்பற்றது என்ற கட்டத்தை நான் அடைந்துள்ளேன். 1998-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது அதை உணர்ந்தேன். ஒரு வருடமாக அணியில் இல்லாத போது, மீண்டும் அணிக்கு திரும்ப கடுமையாக போராடினேன். நான் ஒருநாள் போட்டிக்கு சிறந்தவனா? அல்லது இல்லையா என்பதை விட குறிப்பிட்ட பாதுகாப்பற்ற தன்மைதான் இருந்தது.

ஏனென்றால் நான் ஏற்கனவே டெஸ்ட் வீரராகவும், டெஸ்ட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பந்தை தரையில் அடிக்கவும், பந்தை மேலே தூக்கிய அடிக்கக்கூடாது, பயிற்சியாளர் போன்றவற்றை விரும்பினேன். ஒருநாள் போட்டிக்கான திறமை இருந்தும் கூட, மனதிற்குள் அதை திறம்பட செய்ய முடியுமா? என்ற கவலை இருந்தது.

எனக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை பல கட்டங்களில் இருந்தது. இளம் கிரிக்கெட் வீரராக வளரும்போது, இந்திய அணியில் இடம் பிடிப்பது எளிதான காரியம் இல்லை. ஏராளமான போட்டிகள் உண்டு. நான் வளர்ந்து வரும் நேரத்தில் ரஞ்சி கோப்பை, இந்திய அணி மட்டுமே உண்டு. ஐபிஎல் கிடையாது. ரஞ்சியில் பணமும் குறைவாகத்தான் கிடைக்கும் என்பதால் தொடர் சவால் இருந்து வந்தது.

உங்கள் வாழ்க்கையை படிப்பில் செலவிடுகிறீர்கள். அதை நான் மோசம் என்று சொல்லமாட்டேன். ஆகவே, நான் எளிதான எம்.பி.ஏ. அல்லது மற்ற படிப்பு எதையாவது எளிதாக செய்ய முடியும். கிரிக்கெட் வாழ்க்கையில், விளையாட்டு சரியாக ஒர்க்அவுட் ஆகவில்லை எனில், அதை விட்டுவிட்டு வெளியே வருவதற்கு ஒன்றுமில்லை.

அதனால் அந்த வயதிலும் பாதுகாப்பற்ற நிலை இருந்தது. இந்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களிடம் உரையாடும்போது, எனக்கு அவகைள் உதவியாக இருந்தன. சில பாதுகாப்பற்ற சூழ்நிலை இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது’’ என்றார்.
Tags:    

Similar News