செய்திகள்
கத்தார் உலக கோப்பை

2022 கால்பந்து உலக கோப்பை: போட்டிகள் நடைபெறும் நேரத்தை வெளியிட்டது பிபா

Published On 2020-07-16 10:50 GMT   |   Update On 2020-07-16 10:50 GMT
கத்தாரில் 2022-ல் நடைபெற இருக்கும் உலக கோப்பை கால்பந்து தொடருக்கான போட்டி நடைபெறும் அட்டவணையை பிபா வெளியிட்டுள்ளது.
2022 கால்பந்து உலக கோப்பை கத்தார் நாட்டில் நடைபெற இருக்கிறது. நவம்பர் 1-ந்தேதியில் போட்டி தொடங்கி  டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. குரூப் இடையிலான போட்டிகள் ஒரு நாளை நான்கு போட்டிகள் நடைபெறும் உள்ளூர் நேரப்படி போட்டிகள் மதியம் 1 மணி (இந்திய  நேரப்படி மதியம் 3.30 மணி), மாலை 4 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணிக்க நடைபெறும்.

நவம்பர் 1-ந்தேதி 60 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் கட்டப்பட்டுள்ள பேய்ட் மைதானத்தில் போட்டி நடைபெறும். டிசம்பர் 18-ந்தேதி 6 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்கும். இந்த போட்டி லுசைல் மைதானத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளது.

8 மைதானங்களில் 28 நாட்கள் இந்தத் தொடர் நடைபெற இருக்கிறது.
Tags:    

Similar News