செய்திகள்
விராட் கோலி, கேஎல் ராகுல், ரோகித் சர்மா

ஐசிசி தொடருக்கான இந்திய அணி தேர்வு தவறாகவே இருந்துள்ளது: நசீர் ஹுசைன் சொல்கிறார்

Published On 2020-07-07 10:45 GMT   |   Update On 2020-07-07 10:45 GMT
உலக கோப்பை போன்ற ஐசிசி தொடருக்கு செல்லும்போது ‘ஏ’ திட்டத்துடன் மட்டும் செல்லக்கூடாது, ‘பி’ திட்டத்தை வைத்திருக்க வேண்டும் நசீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஐசிசி நடத்தும் உலக கோப்பை தொடர்களில் நாக்-அவுட் சுற்றில் தடுமாற்றம் அடைந்துள்ளது. 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி, 2019 உலக கோப்பை, 2014 டி20 உலக கோப்பை ஆகியவற்றில் தோல்வியை சந்தித்துள்ளது.

இதற்கு இந்தியா சரியான அணியுடன் செல்லாததுதான் முக்கிய காரணம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நசீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நசீர் ஹுசைன் கூறுகையில் ‘‘ஐசிசி தொடருக்கான இந்திய அணியின் தேர்வு சரியானதாக அமையவில்லை என்பதை நான் உறுதியாக சொல்வேன். கண்டிசனுக்கு ஏற்ப அவர்கள் சற்று தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். ஐசிசி கிரிக்கெட் தொடர் என்பது ஒரு போட்டிக்கான திட்டமல்ல.

யுவராஜ் சிங் 2014 உலக கோப்பை டெத் ஓவரில் சொதப்பியதால் இந்தியா தோல்வியடைந்தது. 2019 உலக கோப்பையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் அரையிறுதியில் தோல்வியை சந்தித்தது.

பந்து லேசாக ஸ்விங் ஆனால் அதற்கு ஏற்றபடி திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் பந்து லேசாக ஸ்விங் ஆனது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஆட்டமிழந்தபின், இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எங்கே சென்றார்கள்.

அவர்கள் சிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பெற்றுள்ளனர். ஆடுகளம் பிளாட்டாக இருக்கும் போது கோலி சதம், ரோகித் சர்மா சதம் என்பது சிறந்ததுதான், ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது. இது எப்போதுமே இந்திய அணிக்கு பாதிப்பாகத்தான் முடிந்துள்ளது.

திடீரென இந்தியா 20 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருக்கும்போது மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், ஆகியோர் பந்து வீசிக் கொண்டிருக்கும்போது, மற்ற வீரர்கள் உடனடியாக அவர்களை எதிர்கொள்வது கடினம். அப்போது நான்கு விக்கெட் வீழ்ந்து விட்டால், அதன்பின் எப்படி எதிர்கொள்வீர்கள். இதனால் ‘பி’ திட்டம் தேவை. ‘ஏ’ என்ற ஒரு திட்டத்தை மட்டுமே வைத்து செல்லக்கூடியாது. எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News