செய்திகள்
சோயிப் அக்தர்

பாகிஸ்தான் சட்ட ஆலோசகர் குற்றச்சாட்டுக்கு சோயிப் அக்தர் பதில்

Published On 2020-05-13 10:50 GMT   |   Update On 2020-05-13 10:50 GMT
பாகிஸ்தான் சட்ட ஆலோசகர் அனுப்பிய அவதூறு வழக்கு நோட்டீஸில் குறைபாடு உள்ளது, என்னை அவர் அவமானம் செய்ய முயற்சிக்கிறார் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தவர் உமர் அக்மல். மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அக்மல் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தடைவித்துள்ளது.

இதுகுறித்து சமூக வலைத்தள சேனலில் கருத்துக் கூறிய சோயிப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகர் தபாஸ்ஜுல் ரிஸ்வியை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ரிஸ்வி சோயிப் அக்தர் மீது அவதூறு வழக்கு தொடர முடிவு செய்தார். இதுகுறித்து அக்தருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு சோயிப் அக்தர் தற்போது பதில் அளித்துள்ளார்.

ரிஸ்வி நோட்டீஸில் சட்ட குறைபாடு உள்ளது. பகிரங்கமாக அவமானப்படுத்துதல், இழிவுபடுத்துதல், அவதூறு செய்தல் மற்றும் கேலி செய்தல் போன்ற செயல்களில் ரிஸ்வி செயல்பட்டுள்ளார். இதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அக்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோயிப் அக்தர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பதில் அளிக்கையில் ‘‘என்னுடைய சேனலில் நான் என்னவெல்லாம் கூறினேனோ, அதுவெல்லாம் பாகிஸ்தான் கிரிக்கெட் சரியான திசையில் செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்துதான். அதேபோல் ரிஸ்வியை பற்றி கூறியது எல்லாம், நான் தனிப்பட்ட முறையில் அவரிடம் பேசியதை வைத்துதான்’’ என்றார்
Tags:    

Similar News