செய்திகள்
சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா

சச்சினை விட ரோகித் சர்மாதான் சிறந்த ஒருநாள் அணி தொடக்க வீரர்: சைமன் டவ்ல்

Published On 2020-05-07 10:35 GMT   |   Update On 2020-05-07 10:35 GMT
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கரை விட ரோகித் சர்மாதான் சிறந்த தொடக்க பேட்ஸ்மேன் என நியூசிலாந்து முன்னாள் வீரர் சைன் டவ்ல் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் நீண்ட காலமாக தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடியவர் சச்சின் தெண்டுல்கர். அவருக்குப்பின் 2013-ல் இருந்து ரோகித் சர்மா தற்போது வரை தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் தெண்டுல்கர் படைத்துள்ளார். ரோகித் சர்மா மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார்.

இந்நிலையில் சச்சின் தெண்டுல்கரை விட ரோகித் சர்மாதான் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைன் டவ்ல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சைன் டவ்ல் கூறுகையில் ‘‘ரோகித் சர்மாவின் ஸ்டிரைக் ரேட் கடந்த காலத்தைவிட சிறப்பாக உள்ளது. 70, 80 ரன்களை கடந்து 90 ரன்களை தொடும்போது கூட பதற்றம் அடைவதில்லை. அவர் தனித்துவமான வீரர்.

இந்தியாவை பொறுத்த வரைக்கும் தனிப்பட்ட முறையில் அவரைத்தான் நான் முதலில் தேர்வு செய்வேன். எல்லா காலக்கட்டத்திலும் இந்திய அணியின் சிறந்த தொடக்க வீரர் ரோகித் சர்மாதான். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் சராசரி 49. ஸ்டிரைக் ரேட் 88. சச்சின் தெண்டுல்கரின் சராசரி 44. ஸ்டிரைக் ரேட் 88. ஆகவே, நம்பர் அடிப்படையில் பார்த்தால் ரோகித் சர்மா சச்சினை விட சிறந்தவர். இதனால் அவரை நம்பர் ஒன்னாக தேர்வு செய்துள்ளேன். அதற்கு அடுத்த வரிசையில் விராட் கோலி, எம்எஸ் டோனி ஆர்டரில் வருவார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News