செய்திகள்
வெயின் பிராவோ

2016 உலக கோப்பையை வென்ற அணியை விட தற்போதைய அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது: வெயின் பிராவோ

Published On 2020-05-07 09:23 GMT   |   Update On 2020-05-07 09:23 GMT
இந்தியாவில் 2016-ல் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கை விட தற்போது வலுவாக உள்ளது என பிராவோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியில் வெயின் பிராவோ இடம் பிடித்திருந்தார்.

அதன்பின் ஓய்வு பெற்ற பிராவோ, ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். 2016-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அணியின் பேட்டிங்கை விட தற்போதைய அணியின் பேட்டிங் வலுவானது என வெயின் பிராவோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெயின் பிராவோ கூறுகையில் ‘‘நாங்கள் கடைசியாக இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடினோம். அப்போது எங்கள் அணியின் கூட்டம் நடைபெற்றது. பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் பேட்டிங் வரிசை குறித்து விளக்கினார். என்னுடைய பெயர் 9-வது இடத்தில் இருந்தது.

நான் 9-வது இடத்தில் களம் இறங்கினால் அணியில் சம்பந்தப்பட்டவனாக இருப்பேன் என நினைக்கவில்லை என்று சக வீரர்களிடம் தெரிவித்தேன். அதன்பின் அணியின் பேட்டிங் வரிசையை குறித்து புரிந்து கொண்டேன். உலக கோப்பையை வென்ற அணியை விட தற்போதைய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது என்று சக வீரர்களிடம் கூறினேன்’’ என்றார்.
Tags:    

Similar News