செய்திகள்
ஹர்பஜன் சிங்

மும்பை - சென்னை இடையிலான ஆட்டம் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் போன்றது: ஹர்பஜன் சிங்

Published On 2020-05-07 09:02 GMT   |   Update On 2020-05-07 09:02 GMT
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான ஆட்டம் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் போன்றது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே-வுடனான இன்ஸ்டாகிராம் உரையாடலின்போது மூத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியதாவது:-

சிஎஸ்கே ஜெர்சியை முதலில் அணிந்தபோது விசித்திரமாக இருந்தது. என்னது இது? கனவுதானா என முதலில் எண்ணினேன். எப்போதெல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே-வுடன் மோதுகிறதோ அப்போதெல்லாம் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமாகவே பார்க்கப்படும்.

இரு அணிகளுக்கும் ஆட்டம் சவாலானதாக இருக்கும். திடீரென மும்பை அணி ஜெர்சியை அணியாமல் சென்னை அணியின் ஜெர்சியை அணிந்தபோது எனக்குக் கடினமாக இருந்தது. இதற்குப் பழகுவதற்குச் சிறிது நாட்கள் ஆனது.

2018-ல் முதலிலேயே மும்பைக்கு எதிராக விளையாடினோம். அதனால் நல்லவேளை இந்த ஆட்டம் சீக்கிரமே நடந்து முடிந்தது எனத் தோன்றியது. முதல் சீஸன் முழுக்க எனக்கு விசித்திரமாகவே இருந்தது. இரண்டாவது சீஸனில் அந்தளவுக்கு இல்லை என்று கூறினார்.



மேலும் அதிர்ஷ்டவசமாக, நாங்கள் மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடினோம். நான், இந்த போட்டியை நாங்கள் ஆரம்பத்தில் முடித்திருப்பது நல்லது என தோன்றுகிறது. முதல் சீசன் முழுவதும், அது கடினமாக இருந்தது. அதன் பிறகு, கோப்பையை வென்றோம். இரண்டாவது சீசன் சிறப்பாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐபிஎல் போட்டியில் 2008 முதல் 2017 வரை 10 ஆண்டுகள் மும்பை அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங், 2018-ம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News