செய்திகள்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 2021 உலக கோப்பை போட்டிக்குத் தகுதி: ஐசிசி

Published On 2020-04-16 08:53 GMT   |   Update On 2020-04-16 08:53 GMT
கொரோனா வைரஸ் தொற்றால் சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 2021 உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
ஐசிசி பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகம் படுத்தியுள்ளது. பெரும்பாலான சுற்று ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் சில சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த ஆண்டே விளையாட வேண்டியது. ஆனால் இந்திய அரசு அனுமதி மறுத்ததால் தொடர் நடைபெறாமல் உள்ளது. அதன்பின் தென்ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா சென்றும், இலங்கை நியூசிலாந்து சென்றும் விளையாட இருந்தது.

இந்தத் தொடர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் புள்ளிகள் அணிகளுக்கு சமமாக பிரித்து கொடுக்கப்பட்டன. இதனடிப்படையில் இந்தியா அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

முதல் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, 2-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து, 3-வது இத்தில் உள்ள் தென்ஆப்பிரிக்கா, 4-வது இடத்தில் உள்ள இந்தியா ஆகிய அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றுள்ளன. நியூசிலாந்து போட்டியை நடத்துவதால் அந்த அணியும் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள மூன்று இடங்களுக்கான தகுதிச்சுற்று தொடர் இங்கிலாந்தில் ஜூலை 3 -ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
Tags:    

Similar News