செய்திகள்
வாசிம் ஜாபர்

விதர்பா அணியின் பயிற்சியாளராகிறார் வாசிம் ஜாபர்

Published On 2020-03-27 10:42 GMT   |   Update On 2020-03-27 10:42 GMT
ரஞ்சி டிராபியல் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இருக்கும் வாசிம் ஜாபர், விதர்பா அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான வாசிம் ஜாபர் (வயது 42), கடந்த 24 ஆண்டுகளாக முதல்-தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். 260 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 19410 ரன்கள் குவித்துள்ளார். இதில் 57 சதங்கள் அடங்கும். இவர் கடந்த 7-ந்தேதி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இவர் கடந்த சில ஆண்டுகளாக விதர்பா அணிக்காக விளையாடி வந்தார். விதர்பா அணியின் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் உள்ளார். இருவருடைய ஒத்துழைப்பால் விதர்பா அணி 2017-18 சீசனில் ரஞ்சி டிராபியையும், 2018-19-ல் இரானி கோப்பையையும் வென்றது.

தற்போது சந்திரகாந்த் பண்டிட் மத்திய அணிக்கு பயிற்சியாளராக செல்ல இருக்கிறார். இதனால் வாசிம் ஜாபரை பயிற்சியாளராக்க விதர்பா முடிவு செய்துள்ளது.

‘‘வாசிம் ஜாபரை பண்டிட் இடத்திற்கு நியமிக்க முடியும். ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக பணி செய்யும் நோக்கம் உள்ளது என்று வாசிம் ஜாபர் சமீபத்தில் கூறியிருந்தார். அதனால் விதர்பா அணியில் இருந்து அவர் பயிற்சியாளர் பணியை தொடங்க முடியும்.

தற்போது விதர்பா கிரிக்கெட் அகாடமியின் எந்த பணியும் நடைபெறவில்லை. ஆனால், வாசிம் ஜாபருக்கு வீரர்களிடையேயும், அதிகாரிகளிடையும் நல்ல பெயர் உள்ளது. இதனால் இந்த வாய்ப்பை புறந்தள்ளி விட முடியாது’’ என விதர்பா கிரிக்கெட் அகாடமியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News