செய்திகள்
கபில் தேவ்

கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பது எனக்குத் தெரியும்: கபில்தேவ் சொல்கிறார்

Published On 2020-03-27 10:18 GMT   |   Update On 2020-03-27 10:18 GMT
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாம் வெற்றி பெறுவோம் என்பது எனக்குத் தெரியும் என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் காட்டுத்தீ போன்று பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. தற்போது வரை 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் சமூக இடைவெளி தேவை அவசியமானது. இதனால் 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி அடைவோம் என்று எனக்குத் தெரியும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கபில் தேவ் கூறுகையில் ‘‘வீட்டிற்குள்ளேயே இருப்பதற்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். கொடூர வைரசை ஒழிக்க இந்த ஒன்றையாவது செய்து உதவி செய்ய வேண்டும். இது நேர்மறையாக வழிக்கு எடுத்துச் செல்லும். ஊடரங்கு அல்லது விட்டிற்குள்ளேயே இருப்பது, இந்த சூழ்நிலையை ஏற்று தங்களுக்குள்ளே ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டிற்குள் உலகம் இருக்கிறது. அதுதான் உங்கள் குடும்பம். புத்தகம், டிவி, மியூசிக் மூலம் பொழுதை போக்கலாம். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடுவது சிறந்தது.

நான் வீட்டை சுத்தம் செய்கிறேன். தோட்டத்தையும் சுத்தம் செய்கிறேன். என்னுடைய சிறிய தோட்டம் தற்போது என்னுடைய கோல்ஃப் மைதானம். என்னுடைய குடும்பத்துடன் அதிக அளவி்லான நேரத்தை செலவிடுகிறேன். நான் பல வருடங்களாக எதையோ இழந்துள்ளேன்’’ என்றார்.
Tags:    

Similar News