செய்திகள்
பாகிஸ்தான் சூப்பர் லீக்

கொரோனா பீதி: பாகிஸ்தான் சூப்பர் லீக் அரையிறுதி, இறுதி போட்டிகள் ரத்து

Published On 2020-03-17 09:40 GMT   |   Update On 2020-03-17 09:40 GMT
கொரோனா பீதி அச்சத்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அரையிறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதி போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து வகை விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒன்றிரண்டு போட்டிகள் ரசிகர்கள் யாரும் இன்றி மூடிய மைதானத்திற்குள் நடைபெற்றன. ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் இறுதி கட்டத்தை எட்டியதால் போட்டியை நடத்தி முடித்திட பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது.

இதற்கிடையே வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் சொந்த நாடுகள் திரும்ப ஆரம்பித்தனர். லீக் சுற்றின் கடைசி இரண்டு ஆட்டங்கள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சில வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் அவர்களும் வெளியேற ஆரம்பித்தனர். இந்த இரண்டு ஆட்டங்களும் மூடிய மைதானத்திற்குள் நடைபெற்றதன.

கொரோனா பீதியால் பிளே-ஆஃப் சுற்று முறையை அரையிறுதி ஆட்டங்களாக மாற்றப்பட்டன. இன்று இரண்டு அரையிறுதி ஆட்டங்களும், நாளை இறுதி போட்டியையும் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த மூன்று போட்டிகளும் லாகூரில் நடைபெற இருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாக்-அவுட் சுற்று போட்டிகளை ரத்து செய்துள்ளது பாகிஸ்தான்.
Tags:    

Similar News