செய்திகள்
அஷ்வினி- சிக்கி ஜோடி

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: இந்தியாவின் அஷ்வினி - சிக்கி ஜோடி தோல்வி

Published On 2020-03-13 13:44 IST   |   Update On 2020-03-13 13:44:00 IST
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் இந்திய ஜோடியான அஷ்வினி - சிக்கி தோல்வியை சந்தித்தனர்.
இங்கிலாந்தில் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான இரட்டை பிரிவில் இந்தியாவின் அஷ்வினி - சிக்கி ஜோடி ஜப்பானைச் சேர்ந்த மிசாகி மட்சுடோமோ - அகாயா டகாஹாஷி ஜோடியை எதிர்கொண்டது.

இதில் இந்திய ஜோடி 13-21, 14-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்திய ஜோடி ஜப்பான் ஜோடிக்கு எதிராக தொடர்ச்சியாக 8-வது முறை தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News