செய்திகள்
கோப்பு படம்

இறுதிப்போட்டியை நேரில் பார்த்த ரசிகருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-03-13 04:15 GMT   |   Update On 2020-03-13 04:15 GMT
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை நேரில் பார்த்த ரசிகருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மெல்போர்ன்:

7-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியை 86,174 ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர். இந்த போட்டியை ஸ்டேடியத்துக்கு சென்று பார்த்த ரசிகர் ஒருவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை மெல்போர்ன் கிரிக்கெட் மைதான நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரசிகர் போட்டியை அமர்ந்து பார்த்த கேலரி மற்றும் இருக்கை விவரத்தை ஆஸ்திரேலிய சுகாதாரம் மற்றும் மனித சேவை துறை வெளியிட்டு இருப்பதுடன் அந்த கேலரியில் அமர்ந்து போட்டியை பார்த்தவர்கள் யாரேனும் கொரோனா பாதிப்பு குறித்து உணர்ந்தால் மருத்துவ சோதனை செய்து உரிய சிகிச்சை முறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.
Tags:    

Similar News