செய்திகள்
இங்கிலாந்து வீரர் கிராலி

இலங்கை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் நாளில் 354/3

Published On 2020-03-12 19:34 IST   |   Update On 2020-03-12 19:34:00 IST
இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிராக இங்கிலாந்து அணி பயிற்சி ஆட்டத்தில் முதல் நாளில் 3 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிராக மோதும் நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. கிராலி, சிப்லி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கிராலி சிறப்பாக விளையாட சிப்லி 37 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டென்லி 26 ரன்கள் சேர்த்தார்.

3-வது விக்கெட்டுக்கு கிராலி உடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சதம் அடித்த கிராலி 105 ரன்னில் வெளியேறினார்.

4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஒல்லி போப்  ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சதத்தை நோக்கி சென்றனர்.

இங்கிலாந்து அணி இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் (90 ஓவர்) 3 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்துள்ளது. ஜோ ரூட் 90 ரன்களுடனும், ஒல்லி போப் 84 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Similar News