செய்திகள்
கபில்தேவ், விராட் கோலி

30-ஐ தாண்டிவிட்டாலே பார்வைத்திறன் சற்று பாதிக்கும்: விராட் கோலி திணறல் குறித்து கபில்தேவ் கருத்து

Published On 2020-03-03 09:27 GMT   |   Update On 2020-03-03 09:27 GMT
இன்-ஸ்விங் பந்தில் எல்பிடபிள்யூ அல்லது போல்டாகிவிட்டால் மிக அதிகமான அளவில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் விராட் கோலி எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழந்தார். இன்-ஸ்விங் பந்தில் அவர் திணறியதை விமர்சகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் 30 வயதை கடந்து விட்டால் பார்வைத்திறன் சற்று குறைந்துவிடும். இதனால் ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கபில்தேவ் விராட் கோலிக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கபில்தேவ் கூறுகையில் ‘‘நீங்கள் 30 வயதை தாண்டும்போது, உங்களுடைய கண்பார்வை திறன் சற்று குறையும். இன்-ஸ்விங் பந்தை பிளிக் மூலம் பவுண்டரிக்கு விரட்டுவதுதான் விராட் கோலியின் பலம். ஆனால், தற்போது தொடர்ந்து இரண்டு முறை ஆட்டமிழந்துள்ளார்.

ஆகவே, அவரது கண்பார்வைத்திறனில் சற்று மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மிகப்பெரிய வீரர்கள் போல்டு அல்லது டபிள்யூ ஆகத் தொடங்கும்போது, அவர்கள் அதிகமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த ஆட்டமிழப்பு உங்களுடைய பார்வைத்திறன் சற்று குறைந்துள்ளது என்பதையும், உங்களுடைய பலம் பலவீனமாக எப்போது வேண்டுமென்றாலும் மாறலாம் என்பதையும் காட்டுகிறது.

18 வயதில் இருந்து 24 வயது வரை பார்வைத்திறன் உச்சமாக இருக்கும். அதன்பின் நீங்கள் எப்படி பயிற்சி எடுக்கிறீர்கள் என்பதை பொறுத்தது. சேவாக், டிராவிட், விவ் ரிச்சர்ட்சன் ஆகியோரும்  இதுபோன்று கஷ்டப்பட்டார்கள்.

ஆகவே விராட் கோலி அதிக அளவில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பார்வைத்திறன் குறையும்போது டெக்னிக் முறையை அதிகப்படுத்த வேண்டும். பவுன்சர் பந்தை முன்னதாக விரைவாக எதிர்கொண்டிருப்பீர்கள். ஆனால் தற்போது அதை கொஞ்சம் காலதாமதமாக எதிர்கொள்கிறார்’’ என்றார்.
Tags:    

Similar News