செய்திகள்
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்

இந்தியா கூடுதலாக இன்னும் 50 ரன் அடித்திருந்தால் கடும் சவாலாக இருந்திருக்கும்: கேன் வில்லியம்சன்

Published On 2020-03-02 12:11 GMT   |   Update On 2020-03-02 12:11 GMT
கிறிஸ்ட்சர்ச்சில் இந்தியா கூடுதலாக இன்னும் 50 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தால் நாங்கள் சேஸிங் செய்ய கடும் சவாலாக இருந்திருக்கும் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா 235, 132 ரன்கள் அடிக்க நியூசிலாந்து அணிக்கு 132 ரன்களே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. நியூசிலாந்து 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்குப்பின் பேசிய கேன் வில்லியம்சன், இந்தியா கூடுதலாக 50 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தால் கடும் சவாலாக இருந்திருக்கும் என தெரிவித்தார்.

இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘மூன்று நாட்களுக்குள்ளேயே போட்டி முடிவடைந்தது நியாயமானது அல்ல. இந்தியா இன்னும் 50 ரன்கள் கூடுதலாக டார்கெட் நிர்ணயித்து இருந்தால் கடும் சவாலாக இருந்திருக்கும்.

எங்களது வீரர்கள் ஆட்டம் அற்புதமானது. மிகவும் சவாலான போட்டியில் முடிவு இப்படி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. 50 ரன்கள் கூடுதலாக இருந்திருந்தால் மிகவும் பேலன்ஸான போட்டியாக அமைந்திருக்கும்.

இரண்டு போட்டிகள் நடந்த ஆடுகளங்களும் பேட்டிற்கும் பந்திற்கும் இடையில் சமபலமான போட்டிக்கானது.  அதிர்ஷ்டம் இருக்கும்போது பந்து வீச்சாளர்கள் மூலம் முதலில் நெருக்கடி கொடுக்க முடியும். இரண்டு போட்டிகளிலும் எங்கள் வீரர்கள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்’’ என்றார்.
Tags:    

Similar News