செய்திகள்
கொரோனா வைரஸால் ரோம் நகரில் முகமூடி அணிந்து செல்லும் பொதுமக்கள்

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: மூடிய மைதானத்திற்குள் ‘செரி ஏ’ லீக் கால்பந்து போட்டிகள்

Published On 2020-02-28 11:08 GMT   |   Update On 2020-02-28 11:08 GMT
இத்தாலியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ‘செரி ஏ’ லீக் கால்பந்து போட்டிகள் மூடிய மைதானத்திற்குள் நடைபெறும் என தெரிவித்துக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ளது. சீனாவுக்குப் பிறகு ஈரான், இத்தாலியில் அதிக அளவிலான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இத்தாலியில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஸ்போர்ட்ஸ் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இத்தாலியின் முதன்மையான கால்பந்து லீக்கான ‘செர்ரி ஏ’-வில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ஐந்து போட்டிகளில் நடைபெற்ற இருக்கிறது. இதில் யுவென்டஸ் - இன்டர் மிலன் மோதும் போட்டியும் ஒன்று. இந்த ஐந்து போட்டிகளும் மூடிய மைதானத்திற்குள் நடைபெறும், ஒளிபரப்பு உரிமை பெற்ற டி.வி. நிறுவனத்தைச் சேர்ந்த சிலரே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News