செய்திகள்
டிரென்ட் போல்ட்

இந்திய அணியை பற்றி அவர்கள் சாதனைகளே பேசும்: டிரென்ட் போல்ட் சொல்கிறார்

Published On 2020-02-28 10:30 GMT   |   Update On 2020-02-28 10:30 GMT
வெலிங்டன் படுதோல்வியில் இருந்து இந்தியா கடுமையான வகையில் மீண்டு வரும் என நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்தின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் படுதோல்வியடைந்தது இந்தியா.

கிறிஸ்ட்சர்ச்சில் நாளை 2-வது டெஸ்ட் நடக்கிறது. முதல் போட்டிக்கான ஆடுகளம் போன்றே 2-வது போட்டிக்கான ஆடுகளமும் புற்கள் நிறைந்த வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் எனக் கூறி வருகின்றனர். ஆனால் தோல்வியில் இருந்து இந்தியா சிறந்த வகையில் மீண்டு வரும் என நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிரென்ட் போல்ட் கூறுகையில் ‘‘இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக உள்ளது.  உலகின் எந்தவொரு சூழ்நிலைக்கு ஏற்பவும் அவர்களால் மாறிக்கொள்ள முடியும். அவர்கள் முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு விரைவாக சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கேற்ப விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்களை பற்றி அவர்களுடைய சாதனைகள் பேசும்’’ என்றார்.
Tags:    

Similar News