செய்திகள்
சதம் அடித்த லீசெல்லா லீ

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை - தென்ஆப்பிரிக்கா அணி 195 ரன் குவித்து சாதனை

Published On 2020-02-28 07:08 GMT   |   Update On 2020-02-28 07:18 GMT
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்த சாதனையை தென் ஆப்பிரிக்கா அணி படைத்துள்ளது.
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று கான்பராவில் நடந்த லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா- தாய்லாந்து அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீராங்கனை லீசெல்லா லீ சதம் அடித்தார். அவர் 101 ரன் எடுத்து அவுட் ஆனார். இது அவரது முதல் சதம் ஆகும். 20 ஓவர் போட்டியில் அதிக ரன் குவித்த தென்ஆப்பிரிக்கா வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

சன்னே லுயஸ் 61 ரன் எடுத்தார். தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன் குவித்தது.

இதன் மூலம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்த சாதனையை தென் ஆப்பிரிக்கா அணி படைத்தது.

இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா 194 ரன் குவித்ததே சாதனையாக இருந்தது.
Tags:    

Similar News