செய்திகள்
பாகிஸ்தான் பெண்கள் அணி

பெண்கள் டி20 உலக கோப்பை: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது பாகிஸ்தான்

Published On 2020-02-26 13:22 GMT   |   Update On 2020-02-26 13:22 GMT
பெண்களுக்கான டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலக கோப்பை தொடரில் இன்று கான்பெர்ராவில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை இங்கிலாந்து எளிதாக வீழ்த்தியது.

2-வது ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் டெய்லர் (43), விக்கெட் கீப்பர் கேம்ப்பெல் (43) ஆகியோரைத் தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீராங்கனைகள் முனீபா அலி (25), ஜவெரியா கான் (35) சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். கேப்டன் பிஸ்மா மரூஃப் ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Tags:    

Similar News