செய்திகள்
ரபெல் நடால்

மெக்சிகோ ஓபன்: ரபேல் நடால் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்

Published On 2020-02-26 16:23 IST   |   Update On 2020-02-26 16:23:00 IST
ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரபேல் நடால், மெக்சிகோ ஓபன் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்.
மெக்சிகோ ஓபன் டென்னிஸ் அகாபுல்கோவில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் நட்சத்திர வீரரான ரபேல் நடால் பப்லோ அண்டுஜார்-ஐ எதிர்கொண்டார். இதில் நடால் 6-3, 6-2 என எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நடால் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் காலிறுதியில் டொமினிக் தீம்மிடம் தோல்வியடைந்தார். அதன்பின் விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.

Similar News