செய்திகள்
கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணி வீரர்கள்

ஐஎஸ்எல் கால்பந்து - கவுகாத்தி, கேரளா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது

Published On 2020-02-07 22:25 IST   |   Update On 2020-02-07 22:25:00 IST
கவுகாத்தியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா, கவுகாத்தி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.
கவுகாத்தி:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி அதெலடிக் மைதானத்தில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கவுகாத்தி எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதின.

ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இரு அணி வீரர்களும் பொறுப்புடன் ஆடினர். ஆனாலும், எந்த அணியாலும் கோல் அடிக்கவில்லை.

இறுதியில், கவுகாத்தி, கேரளா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

Similar News