செய்திகள்
யூனிஸ்கான்

பாகிஸ்தான் கிரிக்கெட் எனக்கு 4 முதல் 6 கோடி ரூபாய் வரை தரவேண்டியுள்ளது: யூனிஸ்கான்

Published On 2020-02-06 10:46 GMT   |   Update On 2020-02-06 11:36 GMT
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்ந்த யூனிஸ்கான், 4 முதல் 6 கோடி வரை கிரிக்கெட் போர்டு தரவேண்டியுள்ளது என்று தெரிவித்தள்ளார்.
பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் யூனிஸ்கான். இவர் பாகிஸ்தான் தேசிய அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 சதம், 33 அரைசதங்களுடன் 10, 099 ரன்கள் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சாதனைப் படைத்துள்ள இவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 4 முதல் 6 கோடி ரூபாய் தரவேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யூனிஸ்கான் கூறுகையில் ‘‘பணத்தை பொறுத்தவரைக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு எனக்கு நான்கு கோடிகள் முதல் 6 கோடி ரூபாய் வரை தரவேண்டியுள்ளது. ஆனால் அந்த தொகையை பெற நான் ஒருபோதும் கோரிக்கை வைத்தது கிடையாது. பணம் பெரிய விஷயம் அல்ல.

உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டும் என கடவுள் தீர்மானித்திருக்கிறாரோ, அதுதான் கிடைக்கும். பணத்திற்கு பின்னால் ஓடக்கூடாது. நான் ஒருபோதும் பணத்திற்கு பின்னால் ஓடமாட்டேன்.

நான் எப்போதும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுடன் இணைந்து செயலாற்ற தயாராக இருக்கிறேன். நான் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கான 17 முதல் 18 வருடங்கள் பணியாற்றியுள்ளேன்’’ என்றார்.
Tags:    

Similar News