செய்திகள்
இந்திய அணி ரசிகர்கள்

நியூசிலாந்து - இந்தியா தொடர்: இந்திய ரசிகர் மைதானத்திற்குள் நுழையத்தடை

Published On 2020-02-03 15:33 IST   |   Update On 2020-02-03 15:33:00 IST
வர்ணனையாளரை மோசமான வார்த்தைகளால் திட்டிய இந்திய ரசிகர் மைதானத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 5-0 எனக் கைப்பற்றியது. இந்த போட்டியை பார்க்க ஏராளமான இந்திய ரசிகர்கள் பே ஓவல் (Bay Oval) மைதானத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது ஒரு ரசிகர் வர்ணனையாளரிடம் ஆட்டோகிராஃப் வாங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த அவர் வர்ணனையாளரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அப்போது போலீசார் அவரை பிடித்து மைதானத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர். மேலும், இந்த சீசன் முடியும் வரை  பே ஓவல் மைதானத்திற்குள் நுழைய அந்த ரசிகருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இங்கிலாந்து - நியூசிலாந்து தொடரின்போது ஜாப்ரா ஆர்சரை திட்டியதற்காக ரசிகர் ஒருவர் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News