செய்திகள்
குணேஸ்வரன்

மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்

Published On 2020-02-03 10:55 IST   |   Update On 2020-02-03 10:55:00 IST
மகாராஷ்டிரா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் இன்று தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.
புனே:

மொத்தம் ரூ.4 கோடி பரிசுத்தொகைக்கான 3-வது மகாராஷ்டிரா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் இன்று தொடங்கி 9-ந்தேதி வரை நடக்கிறது. தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி. தொடரான இந்த போட்டி முன்பு சென்னையில் நடந்து வந்தது. பிரான்சின் பெனோய்ட் பேர், லிதுவேனியாவின் ரிகார்டஸ் பெரான்கிஸ், குரோஷியாவின் கார்லோவிச், இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார், சுமித் நாகல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால் தரவரிசையில் டாப்-10 இடத்தில் உள்ள வீரர்கள் யாரும் வரவில்லை.

சென்னையைச் சேர்ந்த குணேஸ்வரன் தனது முதலாவது சுற்றில் ஜெர்மனியின் யானிக் மாடெனையும், ராம்குமார், இத்தாலியின் சல்வடோர் காருசோவையும் எதிர்கொள்கிறார்கள். இந்திய மூத்த வீரர் லியாண்டர் பெயஸ், ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டெனுடன் கைகோர்த்து களம் இறங்குகிறார். உள்நாட்டில் பெயஸ் விளையாடும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும்.

Similar News