செய்திகள்
வெற்றியை கொண்டாடும் கொல்கத்தா வீரர்கள்

ஐ.எஸ்.எல். கால்பந்து - பரபரப்பான ஆட்டத்தில் கவுகாத்தியை வீழ்த்திய கொல்கத்தா மீண்டும் முதலிடம் பிடித்தது

Published On 2020-01-28 02:22 GMT   |   Update On 2020-01-28 02:22 GMT
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கவுகாத்தியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடத்தை மீண்டும் பிடித்தது கொல்கத்தா அணி.
கொல்கத்தா:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த 68-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. 
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் 0-0 என இரு அணிகளும் சமனிலை வகித்தன.

இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

கடைசி கட்டத்தில் கொல்கத்தா அணியின் மாற்று ஆட்டக்காரர் பல்வந்த் சிங் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி 8-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியது.

கொல்கத்தா அணி தான் ஆடிய 14 ஆட்டத்தில் 8 வெற்றி, 3 தோல்வி மற்றும் 3 ஆட்டம் சமன் என 27 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
கவுகாத்தி அணி தான் ஆடிய 12 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வி மற்றும் 5 ஆட்டம் சமன்  என 11 புள்ளிகள் பெற்று 9ம் இடத்தில் உள்ளது.
Tags:    

Similar News