செய்திகள்
பும்ரா

2019 கற்றலுக்கான ஆண்டு: அதை 2020-ல் ஒட்டுமொத்தமாக வெளிக்காட்ட இருக்கிறேன்: பும்ரா

Published On 2019-12-31 10:53 GMT   |   Update On 2019-12-31 10:53 GMT
உலக பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் யார்க்கர் மன்னன் பும்ரா, 2019-ல் கற்றுக் கொண்டதை 2020-ல் வெளிக்காட்ட இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. ஒருநாள் போட்டியில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியதால் இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

யார்க்கர், ஸ்லோ பந்துகளை வீசும் பும்ராவால் டெஸ்ட் போட்டியில் ஜொலிக்க முடியுமா? என்ற கேள்வி இருந்தது. ஆனால் ஷார்ட் பிட்ச் பவுன்சர், வேகம் ஆகியவற்றால் எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடித்தார்.

இதனால் டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் வரிசையில் முக்கிய இடத்தை எட்டினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார்.

உலகமே இவரை தலைசிறந்த பந்து வீச்சாளர் என்பதை ஒத்துக்கொண்ட நிலையிலும், 2019 கற்றலுக்கான ஆண்டு. கற்ற அனைத்தையும் 2020-ல் வெளிக்காட்ட இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பும்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘2019 சாதனைகள், கற்றல், கடின உழைப்பு மற்றும் நினைவுகளை உருவாக்குதலுக்கான ஆண்டு. அது மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மற்றும் எல்லா இடங்களிலும்... 2019-ம் ஆண்டின் கடைசி நாளில், இந்த வருடத்தின் அனைத்தையும் அடுத்த வருடமும் வெளிக்காட்ட காத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த வருடத்தில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். மேலும் 58 ஒருநாள் போட்டியில் 103 விக்கெட்டும், 42 டி20 போட்டியில் 51 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.

முதுகு வலி காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விளையாடாமல் இருக்கும் பும்ரா, அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கும் இலங்கை டி20 தொடரில் விளையாட இருக்கிறார்.
Tags:    

Similar News