செய்திகள்
மகேந்திர சிங் டோனி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்த ஒருநாள் போட்டிக்கான கனவு அணிக்கு டோனி கேப்டன்

Published On 2019-12-24 16:16 IST   |   Update On 2019-12-24 16:16:00 IST
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள ஒருநாள் போட்டிக்கான கனவு அணிக்கு மகேந்திரசிங் டோனி கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிக்கு கோலி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மெல்போன்:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் விளையாடிய வீரர்களை கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியை அறிவித்தது. 

இதில் ஒருநாள் போட்டிக்கான அணிக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் மகேந்திரசிங் டோனி கேப்டனாக நியமித்துள்ளது. தொடக்க வீரர்களாக இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் ஹசிம் அம்லா உள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள ஒருநாள் போட்டி கனவு அணி விவரம் வருமாறு:-

மகேந்திர சிங் டோனி (கேப்டன்), ரோகித்சர்மா, ஹசிம் அம்லா, விராட்கோலி, டிவில்லியர்ஸ், சகீப்-அல்-ஹசன், ஜோஸ் பட்லர், மிச்சேல் ஸ்டார்க், டிரண்ட் போல்ட், மலிங்கா, ரஷித்கான்.



ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள டெஸ்ட் கனவு அணி வருமாறு:-

விராட் கோலி (கேப்டன்), அலிஸ்டர் கூக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ஸ்டீவன் ஸ்மித், டிவில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், டெயில் ஸ்டெயின், ஸ்டூவர்ட் பிராட், நாதன் லயன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Similar News