செய்திகள்
ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் அய்யர்

கேஎல் ராகுல், விராட் கோலி, ரோகித் சர்மா அவுட்: மீட்கும் பணியில் ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த்

Published On 2019-12-15 10:19 GMT   |   Update On 2019-12-15 10:19 GMT
முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் அவுட்டான நிலையில் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பந்த் அணியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷிவம் டுபே அறிமுகம் ஆனார்.

கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். லோகேஷ் ராகுல் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 4 ரன்னில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

இதனால் இந்தியா 7 ஓவரில் 25 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் நம்பிக்கையுடன் பந்தை எதிர்கொண்டார். அதேவேளையில் ரோகித் சர்மாவால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

இருவரும் நிதானமாக விளையாட இந்தியாவின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. ஆனால் 19-வது ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா 36 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 56 பந்தில் 6 பவுண்டரியுடன் அந்த ரன்னை எடுத்தார்.

அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடி வருகிறது.

40 ஓவர் வரை இந்த ஜோடி நிலைத்து நின்றார் இந்தியா 250 ரன்களை தாண்ட வாய்ப்புள்ளது. தற்போது இந்தியா 29 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் 45 ரன்னுடனும், ரிஷப் பந்த் 28 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News