செய்திகள்
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

குத்தகை காலம் மேலும் 21 ஆண்டுக்கு நீட்டிப்பு: தமிழக அரசுக்கு கிரிக்கெட் சங்கம் நன்றி

Published On 2019-12-13 09:27 GMT   |   Update On 2019-12-13 09:27 GMT
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் குத்தகை காலத்தை மேலும் 21 ஆண்டுக்கு நீட்டித்து அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு கிரிக்கெட் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளது. இங்கு 1934-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் நடந்து வருகிறது. 21 ஒரு நாள் போட்டிகளும், இரண்டு 20 ஓவர் ஆட்டங்களும் நடந்துள்ளன. ஏராளமான சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன. நாளை மறுதினம் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் ஒரு நாள் போட்டி நடக்க உள்ளது.

புகழ்பெற்ற இந்த மைதானத்தின் குத்தகை காலத்தை மேலும் 21 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையொட்டி இந்த ஸ்டேடியத்தை நிர்வகித்து வரும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ரூபா குருநாத், செயலாளர் ராமசாமி ஆகியோர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘விளையாட்டை மேம்படுத்துவதற்கான தமிழக அரசின் ஆர்வத்தை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது. இந்த மைதானத்தில் சீல் வைக்கப்பட்டிருக்கும் ஐ, ஜே, கே ஆகிய மூன்று கேலரி சம்பந்தமான பின்னடைவுகளை ஒழுங்குமுறைப்படுத்தி, அதை மீண்டும் திறந்து பயன்படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாகும்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

Similar News