செய்திகள்
லக்‌ஷயா சென் (வெற்றிக்கோப்பையுடன்), யாகோர் கொயெல்ஹோ

ஸ்காட்லாந்து ஓபன் பேட்மிண்டன் - பட்டம் வென்றார் இந்திய வீரர் லக்‌ஷயா சென்

Published On 2019-11-25 13:20 IST   |   Update On 2019-11-25 13:20:00 IST
ஸ்காட்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய இளம் வீரரான லக்‌ஷயா சென் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்று அசத்தினார்.
எடின்பர்க்:

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் உள்ள எமிரேட் விளையாட்டு அரங்கத்தில் நவம்பர் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஸ்காட்லாந்து ஒபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு நாட்டு வீரர்கள் கலந்து கொண்ட போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் மற்றும் பிரேசில் நாட்டின் யாகோர் கோயல்ஹோ ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள். 

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரரான லக்‌ஷயா சென் (வயது 18) நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாகோர் கோயல்ஹோவுடன் மோதினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் ரவுண்டில் 18-21 என்ற செட் கணக்கில் லக்‌ஷயா சென் பின்தங்கினார். ஆனால் அதன் பின்னர் மற்ற இரண்டு ரவுண்டுகளில் ஆக்ரோஷமாக விளையாடிய அவர், 21-18, 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.

இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் லக்‌ஷயா சென் வென்ற 4வது பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு சார்லார்லக்ஸ் ஒபன், டச்சு ஒபன் மற்றும் பெல்ஜியம் சரவ்தேச போட்டி ஆகிய போட்டிகளில் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
   

Similar News