செய்திகள்
முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா

இந்திய மண்ணில் ஸ்பின்னர்கள் உதவி இல்லாமல் பெற்ற முதல் வெற்றி...

Published On 2019-11-24 11:11 GMT   |   Update On 2019-11-24 11:11 GMT
இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் 18 விக்கெட்டு வீழ்த்தி, சுழற்பந்தாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.

முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 106 ரன்னில் சுருண்டது. இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், முகமது ஷமி இரண்டு விக்கெட்டு வீழ்த்தினர். வங்காளசேதம் 30.3 ஓவர்களே எதிர்கொண்டது.

சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரில் ஜடேஜா ஒரு ஓவர் மட்டுமே விசினார்.

2-வது இன்னிங்சிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். உமேஷ் யாதவ் ஐந்து விக்கெட்டும், இஷாந்த் சர்மா 4 விக்கெட்டும் வீழ்த்தினர். மெஹ்முதுல்லா காயத்தால் வெளியேறியதால் வங்காளதேசம் 195 ரன்கள் எடுப்பதற்குள் 9-வது விக்கெட்டை இழந்த பிறகு ஆல்அட் என அறிவிக்கப்பட்டது.

2-வது இன்னிங்சில் இந்தியா 41.1 ஓவர்கள் வீசியது. இதில் ஜடேஜா 1 ஓவரும், அஸ்வின் ஐந்து ஓவர்களும் வீசினார். ஓட்டுமொத்தமாக இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 ஓவர்களை வீசினர். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

பொதுவாக இந்திய ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் பங்கு இல்லாமல் இந்தியா வெற்றி பெற்றதில்லை. இந்த வெற்றியின் மூலம் சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இந்தியா பெற்ற முதல் வெற்றியாகும். இதன் மூலம் இந்திய மண்ணில் முதன்முறையாக சுழற்பந்து உதவி இல்லலாமல் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது.
Tags:    

Similar News