செய்திகள்
இந்திய அணி வீரர்கள்

வங்காளதேசத்தை 30.3 ஓவரில் சுருட்டி இந்தியா புதிய சாதனை

Published On 2019-11-23 10:11 GMT   |   Update On 2019-11-23 10:11 GMT
இந்தூரில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் குறைந்த ஓவரில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி புதிய சாதனை படைத்ததுள்ளது.
கொல்கத்தா:

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

2 டெஸ்ட் போட்டி தொடரில் இந்தூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. பகல்-இரவாக (பிங்க் பந்து) இந்த டெஸ்ட் நடத்தப்பட்டது.

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆடியது.

இளம் சிவப்பு நிற பந்தில் (பிங்க்) இந்திய வீரர்கள் மிகவும் சிறப்பாக பந்துவீசி சாதித்தனர். முதலில் ஆடிய வங்காளதேச அணி 30.3 ஓவர்களில் 106 ரன்னில் சுருண்டது.

இதன்மூலம் இந்திய அணி புதிய சாதனை படைத்தது. முதல் இன்னிங்சில் குறைந்த ஓவரில் எதிர் அணியை வீழ்த்தி சாதித்தது. இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு ஹராரேயில் நடந்த டெஸ்ட்டில் ஜிம்பாப்வே அணியை 44.2 ஓவர்களில் சுருட்டி இருந்தது. தனது பழைய நிலையை முறியடித்து புதிய சாதனை படைத்தது.
Tags:    

Similar News