செய்திகள்
நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள்

607 நாட்கள், 11 இன்னிங்ஸ்: சிங்கிள் விக்கெட் வீழ்த்த முடியாமல் தவிக்கும் நியூசிலாந்து ஸ்பின்னர்கள்

Published On 2019-11-22 16:11 IST   |   Update On 2019-11-22 16:11:00 IST
நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் சொந்த மண்ணில் கடந்த 607 நாட்களாக சிங்கிள் விக்கெட் கூட வீழ்த்த முடியாத பரிதாப நிலையில் உள்ளனர்.
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் சேர்த்தது. 10 விக்கெட்டுக்களையும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர்.

சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த இன்னிங்ஸ் உடன் தொடர்ந்து 11 இன்னிங்சில் விக்கெட் வீழ்த்த முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 11 இன்னிங்சில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் 101 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளனர். டிரென்ட் போல்ட் 31 விக்கெட்டும், டிம் சவுத்தி 31 விக்கெட்டும், வாக்னர் 27 விக்கெட்டும், கொலின் டி கிராண்ட் ஹோம் 10 விக்கெட்டும், மேட் ஹென்ரி இரண்டு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

607 நாட்களில் 88 ஓவர்கள் வீசியுள்ளனர். அஜாஸ் பட்டேல் 43 ஓவர்களும், டாட் ஆஸ்லே 20 ஓவர்களும், இஷ் சோதி 16 ஓவர்களும், மிட்செல் சான்ட்னெர் 6 ஓவர்களும், கேன் வில்லியம்சன் இரண்டு ஓவர்களும், ஜீத் ராவல் ஒரு ஓவரும் வீசியுள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் 26-ந்தேதியில் இருந்து தற்போது வரை 88 ஓவர்களில் 264 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

Similar News