செய்திகள்
கருப்புப்பட்டை அணிந்து விளையாடிய வீரர்கள்

பாகிஸ்தான் அணியின் 16 வயது இளம் வீரரான நசீம் ஷாவின் தாயார் மரணம்

Published On 2019-11-12 08:46 GMT   |   Update On 2019-11-12 08:46 GMT
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான நசீம் ஷாவின் தாயார் மரணம் அடைந்ததால் வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையில் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. பகல்-இரவு போட்டியான இந்த ஆட்டம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

பாகிஸ்தான் அணியில் 16 வயதே ஆன நசீம் ஷா இடம் பிடித்திருந்தார். இவரது தாயார் நேற்றிரவு திடீரென மரணம் அடைந்தார்.  இதனால் இன்றைய போட்டியின்போது இரண்டு அணி வீரர்களும் தங்களது இரங்கலை தெரிவிக்கும் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.
Tags:    

Similar News