செய்திகள்
கோல் அடிக்கும் முயற்சியில் வீரர்கள்

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று - இந்தியா-வங்காளதேசம் போட்டி டிராவில் முடிந்தது

Published On 2019-10-15 16:46 GMT   |   Update On 2019-10-15 16:46 GMT
இந்திய வீரர் அடில் கான் ஆட்டத்தின் இறுதியில் அடித்த கோல் மூலம் கொல்கத்தாவில் நடந்த உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.
கொல்கத்தா:

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது.

இதில் ‘இ’ பிரிவில் இந்திய அணி இடம் பிடித்துள்ளது. ஓமன், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய அணிகள் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் ஓமனிடம் தோல்வி கண்டது. 2-வது ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி ஆசிய சாம்பியனான கத்தாருடன் டிரா கண்டது.

இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை இன்று எதிர்கொண்டது. இந்த ஆட்டம் கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது.

இந்த போட்டியில் வங்காளதேசம் சார்பில் 42-வது நிமிடம் சாத் உத்தின் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வீரர் அடில் கான் 88-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்து, வங்காளதேசத்தின் வெற்றியை தடுத்து நிறுத்தினார்.
Tags:    

Similar News