ஐக்கிய அரபு எமிரேட்சில் போட்டிகள் நடைபெற இருப்பதால், அதற்கான செலவில் பாதியை இலங்கையிடம் கேட்க பாகிஸ்தான் விரும்புகிறது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் பாகிஸ்தான் மண்ணில் நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால், பாகிஸ்தான் சென்ற இலங்கை வீரர்கள் ஓட்டல் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். இதனால் அவர்களுக்கு சோர்வு ஏற்பட்டது என்று அந்த அணியின் தலைவர் கூறியிருந்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ஏமாற்றம் அளித்தது என பதில் கூறியிருந்தது.
பாகிஸ்தான் சென்று இலங்கை விளையாடுவது இன்னும் உறுதியாக நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டியை நடத்தினால் செலவில் பாதியை இலங்கை கேட்க பாகிஸ்தான் போர்டு விரும்புகிறது.
இலங்கை அணி 2009-ல் பாகிஸ்தான் சென்று வியைாடும்போது பயங்கரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கிச்சுடு நடத்தினார். அதன்பிறகு தற்போதுதான் இலங்கை அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.