செய்திகள்
மஞ்சு ராணி

பெண்கள் உலக குத்துச்சண்டை - இந்தியாவின் மஞ்சு ராணி வெள்ளி வென்றார்

Published On 2019-10-13 08:41 GMT   |   Update On 2019-10-13 08:41 GMT
பெண்கள் உலக குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த இந்திய வீராங்கனை மஞ்சு ராணி வெள்ளி பதக்கம் வென்றார்.
உலன் உடே:

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, ரஷியா வீராங்கனை எகாட்டரினாவுடன் மோதினார்.

இதில் மஞ்சு ராணி 4-1 என்ற கணக்கில் ரஷியா வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இதன்மூலம் மஞ்சு ராணி வெள்ளி பதக்கம் வென்றார்.
Tags:    

Similar News