செய்திகள்
வெற்றி பெற்ற மஞ்சு ராணி

பெண்கள் உலக குத்துச்சண்டை - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி

Published On 2019-10-12 16:24 IST   |   Update On 2019-10-12 16:24:00 IST
பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
உலன் உடே:

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்ரு வருகின்றன.

இன்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, தாய்லாந்து வீராங்கனை சுதாமத் ரக்சத்துடன் மோதினார்.

இதில் மஞ்சு ராணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Similar News