செய்திகள்

ஜார்க்கண்ட்டில் ‘தல’ தோனி மனைவியுடன் சென்று வாக்களித்தார்

Published On 2019-05-06 15:01 IST   |   Update On 2019-05-06 15:01:00 IST
முன்னணி கிரிக்கெட் வீரர் மற்றும் ‘தல’ என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி தொகுதியில் மனைவியுடன் சென்று வாக்களித்தார். #MSDhoni #LSPolls2019
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் இன்று 2வது கட்டமாக நடைபெறுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதையடுத்து இன்று காலை 7 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று விறுவிறுப்பாக வாக்காளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கலந்துக் கொண்டார்.



இதனையடுத்து இன்று காலை,  ஜார்க்கண்ட்டின் ராஞ்சி தொகுதியில்  வாக்களிக்க வேண்டி,  சிறப்பு தனி விமானத்தின் மூலம் சென்னையில் இருந்து ஜார்க்கண்ட் வந்தடைந்தார்.

அதன் பின்னர் தனது மனைவி சாக்‌ஷியுடன் ராஞ்சி தொகுதியில் உள்ள ஜேவிஎம் ஷியாமலி பள்ளிக்கு சென்று வாக்களித்தார். மேலும்  தோனி தனது மகள் சைவாவை தோளில் தூக்கி வந்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் தோனி பேசவில்லை. உடனடியாக அங்கிருந்து தனது குடும்பத்தாரை காண சிமாலியா பகுதிக்கு காரில் புறப்பட்டார். #MSDhoni #LSPolls2019 

Similar News