செய்திகள்
மீராபாய் சானு

ஆசிய பளுதூக்குதல் போட்டி இன்று தொடக்கம் - மீராபாய் சானு சாதிப்பாரா?

Published On 2019-04-20 13:26 IST   |   Update On 2019-04-20 13:26:00 IST
ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள நிங்போவில் இன்று தொடங்குகிறது. கடந்த 9 மாதங்களாக போட்டியில் கலந்து கொள்ளாத மீராபாய் சானு இந்த சவாலில் சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #AsianWeightliftingChampionships
நிங்போ:

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள நிங்போவில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றுகளில் ஒன்றான இந்த போட்டியில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மீராபாய் சானு 49 கிலோ உடல் எடைப்பிரிவில் பங்கேற்கிறார்.

முதுகு வலி பிரச்சினை காரணமாக கடந்த 9 மாதங்களாக போட்டியில் கலந்து கொள்ளாத மீராபாய் சானு இந்த சவாலில் சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 192 கிலோ எடை தூக்கி வரும் மீராபாய் சானு 200 கிலோவுக்கு மேல் தூக்கினால் தான் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அவர் தவிர மேலும் 3 இந்திய வீராங்கனைகளும் பங்கேற்கிறார்கள்.

ஆண்கள் பிரிவில் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற 16 வயதான இந்திய வீரர் ஜெர்மி லால்ரினுங்கா (67 கிலோ), காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் விகாஸ் தாகூர் (96 கிலோ) உள்பட 7 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். போதிய எடை தூக்காததால் தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #AsianWeightliftingChampionships

Tags:    

Similar News