செய்திகள்
குல்படின் நைப்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 3 கேப்டன்கள் நியமனம்

Published On 2019-04-06 10:21 IST   |   Update On 2019-04-06 10:21:00 IST
ஆப்கானிஸ்தானில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தனித்தனியாக கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.#AfghanistanCricketTeam #GulbadinNaib
துபாய்:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தனித்தனியான கேப்டன்களை நியமிப்பது என்று முடிவு செய்து, கேப்டன்கள் விவரத்தையும் நேற்று வெளியிட்டது.

கடந்த 4 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய 31 வயதான அஸ்கார் ஆப்கான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஆப்கானிஸ்தான் ஒரு நாள் போட்டி அணிக்கு ஆல்-ரவுண்டர் குல்படின் நைப் கேப்டனாகவும், சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். குல்படின் நைப் தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையில் பங்கேற்க இருக்கிறது. டெஸ்ட் அணிக்கு ஆல்-ரவுண்டர் ரமத் ஷாவும், 20 ஓவர் போட்டி அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கானும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

உலக கோப்பை போட்டி நெருங்கி வரும் வேளையில் இந்த கேப்டன்ஷிப் மாற்றம் சரியான முடிவு அல்ல, இது பொறுப்பற்ற செயல் என்று அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித்கான், முகமது நபி ஆகியோர் விமர்சித்துள்ளனர். #AfghanistanCricketTeam #GulbadinNaib

Tags:    

Similar News